Thursday, 16 February 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்

எனது பார்வையில்



திரைக்கதை கொஞ்சம் குழப்பமா இருந்தாலும் நல்ல விசுவல்ஸ் ஆக்க்ஷன் ரொமேன்ஸ் காதல் மற்றும் சென்டிமென்ட் உள்ள படம். ஏற்கனவே பார்த்த காதலில் விழுந்தேன் கதைகரு தான். ஆனாலும் அது இல்லைன்னு என்னை யோசிக்க வைத்த திரைக்கதை. கொஞ்சம் எரிச்சல் அடைய வைத்த பிண்ணனி இசை சுமாரான பாடல்கள். அற்புதமான அதர்வா-வின் நடிப்பு மற்றும் பத்திர படைப்பு. கிளைமாக்ஸ் கொஞ்சம் குழப்பமாவும் தெளிவில்லாமலும் இருந்தாலும் நல்ல முடிவு. அழுத்தமான முதல் கொலை, சஸ்பென்ஸ் அவிழ்ந்த நிலையில் ரெண்டாவது கொலை அழுத்தம் இல்லாவிட்டலும் அற்புதமான கட்சி அமைப்பு மற்றும் உண்மையா அல்லது டிராமா என்ற நிலையில் வர்ற கிளைமாக்ஸ் அட்டகாசமான சண்டை காட்சி. நல்ல பாடல்கள் தான் ஆனாலும் விசுவல்ஸ் மற்றும் பாடல் வரிகள் அளவுக்கு எடுபடாத இசை. அமலபால் சில இடங்களில் அழகாகவும் சில இடங்களில் சுமாராகவும் இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் மற்றும் நல்ல நடிப்பு.

சந்தானம் சில கட்சிகளில் தான் வருகிறார். டைமிங் காமெடியில் கலக்கி இருந்தாலும் காமெடி டிராக்கில் கடுப்பாகுது. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்னு தோனலைனாலும், சினிமா ரசிகர்கள் விசுவல்ஸ்க்காகவும் அழுத்தமான காட்சி அமைப்புக்காகவும் பாக்கலாம். சமீப காலமாக வர்ற மொக்க படங்களுக்கு இது தேவலை.

2 கருத்துரைகள்:

  1. நச்னு சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  2. கோவை நேரம்said...
    நச்னு சொல்லி இருக்கீங்க

    நன்றி.. எனது முதல் முயற்சிக்கு முதல் பாராட்டு..

    ReplyDelete